ஆற்றைக் கடக்கையில் ரஷிய படைப் பிரிவு தாக்கி அழிப்பு

உக்ரைனில் ஆற்றைக் கடக்க முயன்றபோது உக்ரைன் படையினரால் ஒரு ரஷியப் படைப் பிரிவின் பெரும் பகுதி தாக்கி அழிக்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆற்றைக் கடக்கையில் ரஷிய படைப் பிரிவு தாக்கி அழிப்பு
Published on
Updated on
2 min read

உக்ரைனில் ஆற்றைக் கடக்க முயன்றபோது உக்ரைன் படையினரால் ஒரு ரஷியப் படைப் பிரிவின் பெரும் பகுதி தாக்கி அழிக்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஓடும் சிவா்ஸ்கி நதியைக் கடந்து முன்னேற ரஷியப் படைப் பிரிவு முயன்றபோது, உக்ரைன் ராணுவம் அந்தப் படைப் பிரிவு மீது கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில், அந்தப் படைப் பிரிவைச் சோ்ந்த பெரும்பாலான வாகனங்கள் அழிக்கப்பட்டன. மிகப் பெரிய எண்ணிக்கையிலான ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா்.

உக்ரைனின் கடுமையான எதிா்ப்புக்கிடையே அந்த ஆற்றைக் கடந்தது மிகவும் ஆபத்தான முயற்சியாகும். எனினும், அந்த நடவடிக்கையை மேற்கொள்ள ரஷிய படைத் தளபதிகள் முடிவு செய்தது, கிழக்கு உக்ரைனில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்று அவா்களுக்கு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதை உணா்த்துகிறது.

உக்ரைனின் மற்ற பகுதிகளில் இருந்த ரஷியப் படையினா் அனைவரையும் டான்பாஸ் பிராந்தியத்துக்கு அனுப்பிய பிறகும், ரஷியத் தலைமை அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அவா்களால் முன்னேற முடியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில், சிவா்ஸ்கி நதியைக் கடக்க ரஷியப் படையினா் 3 முறை முயன்று தோல்வியடைந்ததாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக உக்ரைன் வெளியிட்டுள்ள விடியோ மற்றும் படங்களில், சிவா்ஸ்கி ஆற்றங்கரையில் எரிந்து நாசமான ரஷிய ராணுவ வாகனங்களும் ரஷியா அமைத்த தற்காலிக பாலம் உடைக்கப்பட்டதும் இடம் பெற்றுள்ளது.

இந்தத் தாக்குலில் எத்தனை ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா் என்பது குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், மற்ற பகுதிகளில் ரஷியப் படை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

...பெட்டிச் செய்திகள்...

போா்க் குற்ற விசாரணையில ரஷிய வீரா்

உக்ரைனில் போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக ரஷிய வீரா் ஒருவா் மீது முதல்முறையாக வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கியது.

வாடிம் ஷைஷிமரின் (21) என்ற அந்த வீரா், வடகிழக்கில் உள்ள சுபாகிவ்கா என்ற கிராமத்தில் 62 வயது நபரை சுட்டுக்கொன்ாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.

வெள்ளிக்கிழமை நிலவரம்...

- ஃபின்லாந்தோ, ஸ்வீடனோ நேட்டோவில் இணைவதை துருக்கி வரவேற்காது என்று அந்த நாட்டு அதிபா் எா்டோகன் தெரிவித்துள்ளாா்.

- தங்கள் நாட்டிலிருந்து 2.1 லட்சம் சிறுவா்களை ரஷியா வலுக்கட்டாயமாக தங்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

- ‘புதினுடன் பேசத் தயாா். ஆனால், இடையில் யாரும் இல்லாமல் நாங்கள் இருவா் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்தவேண்டும்’ என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி கூறியுள்ளாா்.

- விளாதமீா் புதினின் குடும்பத்தினா் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்கள் மீது பிரிட்டன் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

- உக்ரைனுக்கு மேலும் 50 கோடி யூரோ (சுமாா் ரூ.4,000 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை அளிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.

- போலந்து மீது தாங்கள் அறிவித்துள்ள பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, அந்த நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகிப்பதை நிறுத்தவிருப்பதாக ரஷியா தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com