
கோப்புப்படம்
இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தூதர் ராஜீவ் பாட்டியாவின் ”இந்திய-ஆப்பிரிக்க உறவுகள்: சேஞ்சிங் ஹாரிசான்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய-ஆப்பிரிக்க உறவு குறித்து அவர் கூறியதாவது, “ மேற்கத்திய நாடுகளின் காலனியாதிக்கம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் தொடர்பை அதிகப்படுத்தியது. இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவின் கட்டுமானப் பணிகளுக்காக ஆட்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே கலாசார பரிமாற்றங்கள் நடைபெற்றது. இறுதியில், இந்திய மக்கள் அதிக அளவில் ஆப்பிரிக்காவில் வசிக்கும் அளவிற்கு நட்பு பெருகியது. மேற்கத்திய நாடுகளால் அடக்குமுறைக்கு ஆளானோம். பின், அவர்களிடமிருந்து போராடி சுதந்திரம் அடைந்தோம். காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இடையிலான நட்பு அதை அனுபவிக்காதவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்தியா-ஆப்பிரிக்கா இடையிலான நட்பு மேலும் அதிகரித்துள்ளது.” என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...