பயங்கரவாத எதிர்ப்பு...உலக வல்லரசுகளுடன் இணக்கம்...இதுதான் பாகிஸ்தானின் வியூகம்

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் அமைதி நிலைநாட்டப்படும் என பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைதி நிலைநாட்டப்படும் என அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் இப்திகார், "ஒட்டு மொத்த பிராந்தியத்திற்கும் பயங்கரவாதம்தான் பொதுவான அச்சுறுத்தலாக உள்ளது.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான எங்களின் தீர்மானத்தை அசைத்து பார்க்க முடியாது என்பதை என்னால் கூற முடியும். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும், பிராந்தியத்திலும் நமது நாட்டிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதை உறுதி செய்வதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் பின்பற்றுவோம்.

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் மூலம் அனைத்து உலக வல்லரசு சக்திகளுடனும் உறவுகளை சீராக வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் பிற வல்லரசுகளுடன் பரஸ்பர நலன், பரஸ்பர நன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சமநிலையான, பரந்த அடிப்படையிலான உறவுகளை நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், "இரு நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு உறவை முன்னோக்கி கொண்டு செல்லவும், ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்தவும் இரு தரப்பிலும் பரஸ்பர விருப்பம் உள்ளது என்பது தெளிவாகிறது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com