கரோனா பாதிப்பு: 16 நாடுகளுக்கு பயண தடை விதித்த சவுதி அரேபியா

கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சவுதி அரேபியா 16 நாடுகளுக்கு பயண தடை விதித்ததுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சவுதி: கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் சவுதி அரேபியா 16 நாடுகளுக்கு பயண தடை விதித்ததுள்ளது. சவுதி மக்கள் இந்தியா, பெலாரஸ், ஆப்கன், இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்தியாவில் கரோனா பரவலின் 3-வது அலை ஏற்பட்டு பின்னர், சமீப காலங்களாக வெகுவாக குறைந்து கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சமீப நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன்படி, இந்தியா உள்பட லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய 16 நாடுகளுக்கு ஆகிய நாடுகளுக்கு தங்களது குடிமக்கள் செல்ல தடை விதித்து உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com