பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வரவேற்பில் சொக்கிப்போனார் மோடி: ஜப்பான் மொழியில் சுட்டுரைப் பதிவு

க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர்.

News image
வரவேற்பில் சொக்கிப்போனார் மோடி: ஜப்பான் மொழியில் சுட்டுரைப் பதிவு
Updated On :23 மே 2022, 11:56 am

DIN

க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு ஜப்பான் வாழ் இந்தியர்கள் உற்சாகம் பொங்க வரவேற்பு அளித்தனர்.

ஜப்பானின் டோக்யோவை வந்தடைந்த மோடிக்கு, ஜப்பான் வாழ் இந்தியர்கள் கோலாகல வரவேற்பை அளித்தனர். ஜப்பான் வாழ் மக்கள் மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

Story image

ஹர் ஹர் மோடி.. மோடி மோடி.. வந்தே மாதரம் மற்றும் பாரத மாதா கி ஜெய் என ஜப்பான் வாழ் இந்தியர்கள் முழக்கமிட்டவாறு பிரதமர் மோடியை வரவேற்றது மெய்மறக்கச் செய்தது.

அது மட்டுமா.. அங்கிருந்த சிலர் இந்தியாவின் சிங்கமே (பாரத் மாதா கா ஷேர்) என்றும் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் கோஷம் எழுப்பினர்.

இந்திய மக்கள் தனக்களித்த வரவேற்பு குறித்து நன்றியுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். இது குறித்து ஜப்பான் மொழியிலும் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார் மோடி.

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் 3-ஆவது உச்சி மாநாடு, டோக்கியாவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி 23-ஆம் தேதி ஜப்பான் செல்கிறாா். 2 நாள்கள் ஜப்பானில் தங்கியிருக்கும் அவா், 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

க்வாட் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறாா். இதுதவிர, ஜப்பானைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா்; இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்தித்து உரையாடவுள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.