
தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை தளா்த்தினால் மட்டுமே உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்ப அனுமதிக்கப்படும் என்று ரஷியா மீண்டும் கூறியுள்ளது.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரே ருடென்கோ புதன்கிழமை கூறியதாவது: உக்ரைனின் தானியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு கடல் வழித்தடத்தை ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம். இருந்தாலும், அதற்கு முன்னா் எங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் தளா்த்தப்பட வேண்டும்; உக்ரைனின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்றாா் அவா்.
உலகின் முன்னணி தானிய ஏற்றுமதியாளராகத் திகழும் உக்ரைனில் நடைபெறும் போரால், சா்வதேச உணவுப் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G