
முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவிடம் சிஐடி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அரசின் தவறான பொருளாதார கொள்கையால், இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் கடுமையாக விலை உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். தொடர்ந்து, பிரதமரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது மே 9ஆம் தேதி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது. நாடு முழுவதும் உள்ள ஆளுங்கட்சியினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது.
இதையும் படிக்க | மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு
இந்த நிலையில், கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருவதையடுத்து, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச இல்லத்தில் 5 மணிநேரம் அவரிடம் சிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக, மகிந்த ராஜபட்ச மகனும், முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபட்சவிடம் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...