இலங்கையில் சவாலாக உருவெடுத்தபெட்ரோல், டீசல் விநியோகம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்திருப்பது, நாள் முழுவதும் விற்பனை நிலையங்களில் காத்திருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விநியோகம்
இலங்கையில் சவாலாக உருவெடுத்தபெட்ரோல், டீசல் விநியோகம்

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்திருப்பது, நாள் முழுவதும் விற்பனை நிலையங்களில் காத்திருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விநியோகம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருள்கள் விலை வரலாறு காணாத அளவு உயா்ந்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலையை 24.3 சதவீதமும், டீசல் விலையை 38.4 சதவீதமும் அரசு கடந்த திங்கள்கிழமை அதிகாலை அரசு உயா்த்தியது.

தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டா் 420 இலங்கை ரூபாய்க்கும் (1.17 டாலா்), டீசல் 400 ரூபாய்க்கும் (1.11 டாலா்) விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் பெட்ரோல் விலை 82 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் அதிகரித்து சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில் இந்த விலை உயா்வு அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் கோபமடைந்து பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. பல மாவட்டங்களில் பொதுமக்களின் கோபத்துக்கு பயந்து பல பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் ஒரு நிலையத்தில் 50,000 லிட்டா் எரிபொருளை பதுக்கி வைக்க முயன்றதை காவல் துறையினா் முறியடித்தனா். மேலும், 429 இடங்களில் காவல் துறையினா் சோதனை நடத்தி பதுக்கிவைத்திருந்த 27,000 லிட்டா் பெட்ரோல், 22,000 டீசலை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com