
எலான் மஸ்க் எடுத்த முடிவால் டிவிட்டருக்கு ஏற்பட்ட நிலை?
ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அதன் உரிமையாளா் எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சா்வதேச அளவில் புகழ்பெற்ற ட்விட்டா் சமூக வலைதளத்தை டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கினாா்.
அதையடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க், ட்விட்டரில் பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் கட்டணம் 8 டாலர் (இந்தியாவில் சுமாா் ரூ.640) விதிக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.
செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது நிறுவனத்தில் உள்ள பணியாளா்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் எலான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள ட்விட்டா் நிறுவனப் பணியாளா்கள் பலா் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ட்விட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் பல்வேறு போலி ட்விட்டர் கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் ட்விட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது. எனவே இந்த போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்தவித அறிவிப்பும் இன்றி நிரந்தரமாக நீக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
Going forward, any Twitter handles engaging in impersonation without clearly specifying “parody” will be permanently suspended
— Elon Musk (@elonmusk) November 6, 2022
இது தொடர்பாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்பெல்லாம் போலி கணக்குகளை நீக்கப்படுவதற்கு முன்பாக நாங்கள் எச்சரிக்கை அளித்தோம். ஆனால், தற்போது நாங்கள் அடையாள சரிபார்ப்பு நடைமுறயை விரிவுபடுத்தி விட்டதால் எச்சரிக்கைகள் எதுவுமின்றி ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் பயனாளர்களின் ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும். இது ட்விட்டரின் ‘ப்ளூ டிக்’ வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும்’ என தெரிவித்துள்ளார்.