டெஸ்லாவின் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க் !

எலான் மாஸ்க் சுமார் ரூ.32,500 கோடி அளவிலான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
டெஸ்லாவின் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார் எலான் மஸ்க் !

வாஷிங்டன்: எலான் மாஸ்க் சுமார் ரூ.32,500 கோடி அளவிலான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், சமீபத்தில் சா்வதேச அளவில் புகழ்பெற்ற ட்விட்டா் சமூக வலைதளத்தை சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கினாா். 

அதையடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய ஒரு வாரத்திற்குள் டெஸ்லா நிறுவனத்தின் சுமார் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார் எலான் மஸ்க். 

செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (எஸ்இசி) தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், சுமார் ரூ.32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எலான் மஸ்க் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்தது. 

ட்விட்டரை கைப்பற்றியதிலிருந்து மஸ்கின் நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கைகள் உள்பட கவலையைத் தூண்டியுள்ளன.

ஐ.நா உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், சமூக வலைத்தளத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை முதன்மைப்படுத்துமாறு மஸ்க்கை வலியுறுத்தியுள்ளார்.

மஸ்க் ‘‘ட்விட்டரில் பதிவிடப்படும் கருத்துகளை மதிப்பீடு செய்வதற்கான ஒரு குழுவை உருவாக்குவேன் என்று தெரிவித்திருந்தார். 

பங்குச் சந்தையில் இருந்து ட்விட்டரை விடுவிக்க மஸ்க் எடுத்த முடிவு, அவரை விரைந்து பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு அனுமதித்தது, ஆனால், அது நிறுவனத்தை அதிகக் கடனில் தள்ளியது, நிறுவனத்தின் நிதியை இழப்பது வணிகத்திற்கான ஆபத்தான தேர்வாகும்.

ட்விட்டா் நிறுவனத்தின் உரிமையாளராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் நால்வரை எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கியுள்ளாா். ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த இந்தியரான பராக் அக்ரவால், நிறுவனத்தின் சட்ட அதிகாரியும் இந்தியருமான விஜயா கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் செகல், பொது ஆலோசகா் சென் எட்கெட் ஆகியோரை எலான் மஸ்க் நீக்கினார். 

ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்களை பாதியாகக் குறைப்பதற்காக மொத்தம் உள்ள 7400 பணியாளர்களில் 3700 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் உத்தரவிட்டார். இதனால், ட்விட்டரில் நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ட்விட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் பல்வேறு போலி ட்விட்டர் கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் ட்விட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது. எனவே இந்த போலி ட்விட்டர் கணக்குகளை உருவாக்கி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்தவித அறிவிப்பும் இன்றி நிரந்தரமாக நீக்கப்படும் என எலான் மஸ்க் எச்சரித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com