
நேபாளத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், தில்லியிலும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேற்கு நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, நேற்று அதிகாலை 4.37 மணியளவிலும், இரவு 8.52 மணியளவிலும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது தில்லி மற்றும் நொய்டா, ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.