உலக மக்கள்தொகை 800 கோடி

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை செவ்வாய்க்கிழமை (நவ. 15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்துள்ளது.
உலக மக்கள்தொகை 800 கோடி

உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை செவ்வாய்க்கிழமை (நவ. 15) 800 கோடியை எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் வசித்து வரும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்எஃப்பிஏ) தெரிவித்துள்ளது. கடந்த நூற்றாண்டில் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது.

உலக மக்கள்தொகை 2037-ஆம் ஆண்டில் 900 கோடியையும், 2058-ஆம் ஆண்டில் 1,000 கோடியையும் எட்டும் என ஐ.நா. அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக மக்கள்தொகையில் 142.6 கோடி பேரைக் கொண்டு சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 141.2 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2023-ஆம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. அதே வேளையில், இந்தியாவில் மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சராசரி கருவுருதல் விகிதம் 2.2-லிருந்து 2-ஆக குறைந்துள்ளது. நாட்டில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலையான கருவுருதல் விகிதமான 2.1 என்ற நிலையை அடைந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன குடும்ப கட்டுப்பாட்டு நடைமுறைகளே இந்தியாவில் கருவுருதல் விகிதம் குறைந்ததற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை கடந்து வந்த பாதை

200 கோடி 1927

300 கோடி 1960

400 கோடி 1974

500 கோடி 1987

600 கோடி 1999

700 கோடி 2011

800 கோடி 2022

700-லிருந்து 800 கோடியில் முக்கியப் பங்களிப்பு

இந்தியா 17.7 கோடி

சீனா 7.3 கோடி

2050-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணிப்பு

இந்தியா 166.8 கோடி

சீனா 131.7 கோடி

உலகம் 950 கோடி

மக்களின் சராசரி வயது

இந்தியா 28.7

சீனா 38.4

ஜப்பான் 48.6

உலக அளவில் 30.3

உலக மக்களின் சராசரி ஆயுள் காலம்

1990 64

2019 72.8

2050 77.2 (கணிப்பு)

உலக மக்கள்தொகையில் முதியோா்

2022 10%

2050 16%

இந்திய மக்கள்தொகை

15 முதல் 64 வயது 68%

65+ 7%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com