டிவிட்டரில் சேர யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்: டிவிட்டர் துணைத் தலைவர்

டிவிட்டரில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரை செய்ய மாட்டேன் என அந்நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன் தெரிவித்துள்ளார்.

டிவிட்டரை எலான் மாஸ்க் வாங்கியது முதல் ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இதனால், பலதரப்பட்ட பிரபலங்களால் எலான் மஸ்க்கும், அவர் புதிதாக வாங்கிய டிவிட்டர் நிறுவனமும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. 

அந்தவகையில், டிவிட்டர் உலக அளவிலான நிர்வாகத்தின் துணைத் தலைவராக பணிபுரிந்த கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன், டிவிட்டர் நிறுவனத்தின் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரை செய்யமாட்டேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். 

ஏலத் தொகை டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய முயற்சி நச்சுத்தன்மை வாய்ந்தது. நான் இப்படி உணருவேன் என நினைக்கவில்லை. ஆனால், இதுதான் உண்மை. டிவிட்டரில் பணிபுரிய யாரையும் இனி பரிந்துரைக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com