மெக்ஸிகோவில் மீட்புப் படை நாய்க்கு சிலை திறப்பு

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேருதவி செய்த மெக்ஸிகோவின் மீட்புப் படையைச் சேர்ந்த மோப்ப நாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேருதவி செய்த மெக்ஸிகோவின் மீட்புப் படையைச் சேர்ந்த மோப்ப நாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஃபிரிடா.. 13 வயதாகும் மோப்ப நாய் ஓய்வு பெற்றுவிட்டாலும் அதன் அபார திறனும் அழகும் குறையவில்லை. மக்கள் பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரா இது பற்றி கூறுகையில், இன்று ஃபிரிடாவின் சிலை திறந்துவைக்கப்பட்டது. அதனை உணர்ச்சிப் பெருக்குடன் பார்க்கிறோம். மெக்ஸிகோ நிலநடுக்கத்தின்போது, மெக்ஸிகன் கடற்படையின் ஊரக ஆய்வு மற்றும் மீட்புப் படையிலிருந்த ஃபிரிடாவின் மூலம் எங்கள் குழுவினர் மிகப்பெருமை அடைந்தனர்.

கடற்படை செயலாளர் ஃபிரிடாவின் சிலையை திறந்து வைத்தார். 13 வயதாகும் ஃபிரிடா பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தது.

எங்களது மிகச் சிறந்த அமைப்பில் இணைந்து ஃபிரிடா அளப்பரிய பணியை செய்திருக்கிறது. உனது வாழ்க்கை, மெக்ஸிகோவுக்காக எதையும் அர்ப்பணிக்கு மக்களை உத்வேகப்படுத்துகிறது. அன்புக்குரிய ஃபிரிடாவுக்கு நன்றி என்றும் அவர் கூறினார்.

ஃபிரிடாவின் சிலை, அது மீட்புப் படையின் சீருடை அணிந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. காலில் பாதுகாப்பு பூட்ஸ்கள், முகத்துக்கு கவசமும் அணிந்துள்ளது. இந்தச் சிலை வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 53 மீட்புப் பணிகளை மேற்கொண்டிருக்கும் ஃபிரிடா, 12 பேர் உயிருடன் மீட்கப்படவும், 40 உடல்களை மீட்கவும் உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com