
துபையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் காரின் சோதனை வெற்றி பெற்றது. விரைவில் இந்த பறக்கும் கார் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
சீனாவின் மின்சார வாகன தொழில்நுட்ப நிறுவனமான ‘எக்ஸ்பெங்’ இந்த பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது. இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் பெயர் ‘எக்ஸ் 2’.
அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் 130 கீ.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த கார், 760 எடையுடன் பறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் மேலும் 12 பெண்கள் நரபலி? திடுக்கிடும் தகவல்
துபை நகரில் கடந்த திங்கள்கிழமை அன்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. ’எக்ஸ்2’ உலகின் முதல் பறக்கும் கார் இல்லை என்றாலும், முதல்முறையாக பொதுமக்களை சுமந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார் குறித்து எக்ஸ்பெங் நிறுவனம் கூறுகையில், ‘எக்ஸ் 2’ காரை முதலில் துபையில் அறிமுகப்படுத்தவுள்ளோம். மெல்ல மெல்ல சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.