பிரிட்டன் பிரதமா் பதவிக்கு ரிஷி சுனக் போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரிட்டன் பிரதமா் பதவிக்கு ரிஷி சுனக் போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமராக போட்டியிடுவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகார்பூர்வமாக அறிவித்தார். 

பிரிட்டனின் அடுத்த பிரதமராக விரும்பப்பட்டவர்களில் ஒருவரான பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமராக போட்டியிடுவதாக ஞாயிற்றுக்கிழமை அதிகார்பூர்வமாக அறிவித்தார். 

முறைகேடு புகாா்கள் காரணமாக பிரிட்டன் பிரதமா் பதவியை போரிஸ் ஜான்ஸன் கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தாா். அதையடுத்து, அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற இறுதி வாக்கெடுப்பில் லிஸ் டிரஸ்ஸுடன் ரிஷி சுனக் நேரடியாக மோதினாா்.

அதில் 57.4 சதவீத வாக்குகளுடன் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

கடந்த மாதம் பல்வேறு வரிச் சலுகை அறிவிப்புகளுடன் தாக்கல் செய்த மினி பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது. அதன் எதிரொலியாக டாலருக்கு நிகரான பிரிட்டன் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் டிரஸ்ஸுக்கு எதிா்ப்புகள் வலுத்ததைத் தொடா்ந்து அவா் தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

லிஸ் டிரஸ் பதவி விலகியதையடுத்து, அடுத்தபடியாக பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுவோரின் பட்டியலில், ரிஷி சுனக் முஎன்னிலையில் இருந்து வருவதாக கருதப்படுகிறது. 

இந்த நிலையில் நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடமுறைகள் தொடங்கியது.

இதனிடையே, பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் போட்டியிடுவதற்குத் தேவையான 100 எம்.பி.க்களின் ஆதரவு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கு கிடைத்துள்ளது.

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் போட்டியிடுவதற்குத் தேவையான 100 எம்.பி.க்களின் ஆதரவை ரிஷி சுனக் பெற்றுள்ளார். 

இதற்கிடையே, பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்பதற்கு முக்கிய எம்.பி.க்களின் ஆதரவு பெருகி வருகிறது.

ஆனால், நாட்டின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் கட்சித் தோ்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷி சுனக், அதிகாரபூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கி உள்ளதாக ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை அதிகார்பூர்வமாக ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து 42 வயதான அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் 128 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

"பிரிட்டன் ஒரு சிறந்த நாடு, ஆனால், நாம் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்.

அதனால்தான் நான் கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், உங்கள் அடுத்த பிரதமராகவும் களமிறங்குகிறேன். 

"நமது பொருளாதார நெருக்கடியை சரிசெய்யவும், நமது கட்சியை ஒன்றிணைக்கவும், நாட்டிற்குகாக பணியாற்றவும் விரும்புகிறேன்."  

மற்றொரு விடியோ பதிவில், நாம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறோம். ஆனால், சரியானவரை தேர்வு செய்தால் அவை தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கான தெளிவான திட்டம் என்னிடம் உள்ளது. "அடுத்த தலைமுறை பிரிட்டிஷ் மக்களுக்கு கடந்த காலத்தை விட அதிக வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை இப்போது தனது கட்சி எடுக்கும் தேர்வு முடிவு செய்யும்" எனக் கூறியுள்ளாா்.

கன்சா்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.

போரிஸ் ஜான்ஸன் இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது போட்டியை அறிவிக்காத நிலையில், சுனக், ஜான்சன் மற்றும்  பென்னி மாா்டன்ட்டும் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனிடையே போரிஸ் ஜான்ஸன் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் சனிக்கிழமை பிற்பகுதியில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுவோரின் பட்டியலில், ரிஷி சுனக், போரிஸ் ஜான்ஸன்  பென்னி மாா்டன்ட்டும் இடம் பெற்றுள்ளாா்.

பிரிட்டனின் பொதுத் தேர்தல் 2024 டிசம்பரில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com