‘ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ரிஷி சுனக் பங்கேற்பில்லை’

அடுத்த மாதம் நடைபெறவிக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், பிரிட்டன் சாா்பாக அந்த நாட்டின் புதிய பிரதமா் ரிஷி சுனக் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் அவசரகால பட்ஜெட்டை தாக்கல் செய்வது உள்பட, உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் பிரதமா் ரிஷி சுனக் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, எகிப்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அவா் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. எனினும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுவதற்காக முந்தைய அரசுகள் அளித்த வாக்குறுதியிலிருந்து பிரிட்டன் பின்வாங்காது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கிடையே, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com