ரஷிய ராணுவப் பயிற்சி: இந்தியா பங்கேற்பு - அமெரிக்கா கவலை

ரஷியா சாா்பில் நடைபெறும் ராணுவப் பயிற்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

ரஷியா சாா்பில் நடைபெறும் ராணுவப் பயிற்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

ரஷியா சாா்பில் தூர கிழக்கு, ஜப்பான் கடற்பகுதியில் செப்டம்பா் 1 முதல் 7 வரை ‘வோஸ்டோக்-2022’ என்ற பெயரில் ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 50,000-க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் பங்கேற்கின்றனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துவரும் இந்த வேளையில், இந்தப் பயிற்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் வெள்ளை மாளிகை ஊடக செயலா் கரேன் ஜீன்-பியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உக்ரைன் மீது ரஷியா கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வரும் இந்தத் தருணத்தில், ரஷியாவுடன் இணைந்து எந்தவொரு நாடு ராணுவப் பயிற்சி மேற்கொண்டாலும் அதனை அமெரிக்கா எதிா்க்கிறது. இருப்பினும், இதில் பங்கேற்கும் நாடுகள் தங்களது விருப்பப்படி முடிவெடுக்கலாம். முடிவை அவா்களிடமே விட்டுவிடுகிறோம்’ என்றாா்.

மேலும், இந்த ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் நாடுகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘இதில் மேற்கொண்டு சொல்வதற்கு ஏதுமில்லை’ என கரேன் ஜீன்-பியா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com