
ஆப்கனில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.
மேற்கு ஆப்கனின் ஹெராத் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையையொட்டி தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 20 பேர் பலியானார்கள்.
மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- தமிழ்நாடு - கேரள முதல்வர்கள் சந்திப்பு
மேலும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமீபத்திய மாதங்களில் ஆப்கனில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G