பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,186-ஆக உயா்வு

 பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,186-ஆக உயா்ந்துள்ளது.
பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,186-ஆக உயா்வு

 பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,186-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 1,186 போ் உயிரிழந்துள்ளனா்; 4,896 போ் காயமடைந்துள்ளனா்; 5,063 கி.மீ. சாலைகள் சேதமடைந்தன; 1,172,549 வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, லட்சக்கணக்கானவா்கள் தங்குமிடம், உணவு, குடிநீா் இல்லாமல் தவித்து வருகின்றனா்.

இந்த கனமழைக்கு 7,33,488 கால்நடைகள் பலியாகியுள்ளன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை 50,000 பேரை மீட்டுள்ளதாக ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

வெள்ளத்தால் மிகக் கடுமாயாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 16 கோடி டாலா் (சுமாா் ரூ.1,273 கோடி) நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உலக நாடுகளிடம் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com