பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? 

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள் திங்கள்கிழமை(செப்.5) அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 
பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? 


லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள் திங்கள்கிழமை(செப்.5) அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 42 வயதான முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்குக்கும், 47 வயதான வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ்ஸுக்கும் இடையே போட்டி நிலவியது. 

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சியை சேர்ந்த 2 லட்சம் உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

புதிய பிரதமர் யார்? என்பது குறித்து நாளை மறுநாள் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி அறிவிக்க உள்ளார்.

கடந்த ஒரு மாதமாக 1,60,000 வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்காக பிரிட்டனில் நடத்தப்பட்ட 12 நேரடி விவாத நிகழ்ச்சிகளில் தங்களது வாதங்களை முன்வைத்தனா். இதில், 19,859 பேர் நேரில் கலந்து கொண்டதாகவும், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைன் தளங்களில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

விவாதங்களில் ஒட்டுமொத்தமாக, பிரிட்டன் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எப்படிச் சமாளிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் ஆதிக்கம் செலுத்தியது, இருவரும் புதன்கிழமை இரவு லண்டனில் தங்கள் இறுதிப் பேச்சுக்களில் தங்களின் பல உறுதிமொழிகளை மீண்டும் வலியுறுத்தினர்.

ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுனக், "பிரசாரத்தின் மையத்தில் நம்பிக்கையை மீட்டெடுப்பதை நான் முன் வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார். 

இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்டீபன்சன் கூறியதாவது:  
"ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்கள் கட்சி உறுப்பினர்கள் முன் மற்றும் தனிப்பட்ட முறையில் 600-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர். திங்கட்கிழமை என்ன முடிவு வந்தாலும், ஒரு புதிய தலைவரை சார்ந்து ஒன்றுபடவும், நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும் கட்சி தயாராக உள்ளது என்பதை நான் அறிவேன்," என்று கூறினார்.

சுனக் அல்லது லிஸ் டிரஸ் இருவரில் ஒருவர் புதன்கிழமை ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தங்கள் முதல் பிரதமரின் கேள்விகளுக்கு உரையாற்றுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com