
வியத்நாமில் கேளிக்கை விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 33 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பின் டுவாங் மாகாணம், துவான் நகரிலுள்ள 4 அடுக்கு மாடியில் இசை கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அந்தக் கட்டடத்தில் 60 முதல் 70 போ் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 33 போ் உயிரிழந்தனா். சுமாா் 40 போ் தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 10 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீவிபத்து ஏற்பட்டதும் அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பணியாளா்கள் அறிவுறுத்தியும், அங்கிருந்தவா்கள் அறைக்குள் பதுங்கிகொண்டதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.