பாகிஸ்தானில் திருநர் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

பாகிஸ்தானில் திருநர்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளதால் அந்த சமூகம் அச்சுறுத்தலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பாகிஸ்தானில் திருநர் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

பாகிஸ்தானில் திருநர்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளதால் அந்த சமூகம் அச்சுறுத்தலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தானில் திருநர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால், அந்த சமூகம் நாட்டில் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான மக்களில் 10,418 பேர் திருநர்கள்(திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்). 

இந்நிலையில் அந்நாட்டில் திருநர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் மிகவும் துன்பமான சூழ்நிலையில் அச்சுறுத்தலில் வாழ்வதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சமீபத்தில் கடந்த செப்டம்பர் 11 அன்று, ராவல்பிண்டியில் ஒரு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று திருநர்கள் மற்றும் அவர்களது ஓட்டுனர் காயமடைந்தனர்.

முன்னதாக செப்டம்பர் 1 ஆம் தேதி, சிந்துவின் தலைநகரான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் மஜித் என்ற திருநரும் ஜூலை 1 ஆம் தேதி, ராவல்பிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் போலீஸ் எல்லையில் அமீர் மசிஹ் என்ற திருநரும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

இதுபோன்று பல சம்பவங்கள் அங்கு தொடர்ந்து நடைபெறுவதாகவும் இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் கொலைகளை விசாரிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், திருநர் சமூகத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com