ஐ.நா கொள்கைகளை வெட்கமின்றி மீறியுள்ளது ரஷியா: ஜோ பைடன்

ஐ.நா அடிப்படைக் கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளது ரஷியா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி பேசியுள்ளார். 
ஐ.நா கொள்கைகளை வெட்கமின்றி மீறியுள்ளது ரஷியா: ஜோ பைடன்


நியூயார்க்: ஐ.நா அடிப்படைக் கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளது ரஷியா என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி பேசியுள்ளார். 

நியூயார்க்கில் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ராணுவத்தாக்குதல் நடத்திய ரஷிய அதிபர் விளாதிமீர் புதீன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளதாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். 

 “ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற போர் இது. ரஷியாவை யாரும் அச்சுறுத்தவில்லை. ரஷியாதான் இந்த போரை நாடியிருக்கிறது.

மேலும், "​​ஐ.நா. பொதுச் சபையின் அடிப்படையான நிலையான மற்றும் நியாயமான, விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையானது, தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதை சிதைக்க விரும்புபவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறது" என்று பைடன் கூறினார். 

"ஐக்கிய நாடுகளின் சாசனம் உலகின் ஜனநாயக நாடுகளால் மட்டும் கையெழுத்திடப்படவில்லை. இது குடிமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 12-க்கும் மேற்பட்ட நாடுகள், பல்வேறு வரலாறுகள் மற்றும் சித்தாந்தங்கள், கொள்கைகள் அடிப்படையில் அமைதிக்காக பணியில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டில் உருவாக்கப்பட்டது."

ரஷிய அதிபர் புதீன் "ரஷியா அச்சுறுத்தப்பட்டதால் உக்ரைன் மீது போர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறுகிறார், ஆனால். யாரும் ரஷியாவை அச்சுறுத்தவில்லை, ரஷியாவைத் தவிர வேறு யாரும் போரை நாடவில்லை" என்றார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடு அதன் அண்டை நாடு மீது படையெடுத்து, ஒரு இறையாண்மை கொண்ட அரசை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க முயன்று வருகிறது" என்று பைடன் கூறினார். "ஐ.நா பொதுச் சபையின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளது. 

எல்லா இறையாண்மையும் கொண்ட நாடுகளைபோல உக்ரைனுக்கும் தங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்ள எல்லா உரிமையும் கொண்டுள்ளது. ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். 

மேலும், ரஷியாவின் ஆக்கிரமிப்பு, கரோனோ தொற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்ய 2.9 பில்லியன் டாலர் புதிய அமெரிக்க முதலீட்டையும் அறிவித்த பைடன், உக்ரைனுக்கு இதுவரை உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்ய ஏற்கனவே அமெரிக்கா அளித்த உறுதியளிப்பின்படி 6.9 பில்லியன் டாலர்களுக்கு மேல் பாதுகாப்பு உதவி மற்றும் நேரடி பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளதாக பைடன் கூறினார். 

ஒரு நாட்டை தங்கள் சுய விருப்பத்திற்காக யாரும் கைப்பற்றிட முடியாது. ரஷியா மீதான தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  

ரஷியா செய்த அட்டூழியங்களை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்திருக்கிறது ரஷியா. 

"ரஷியாவின் போரே உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்குகிறது. ரஷியாவால் மட்டுமே அதை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று ஜோ பைடன் கூறினார்.

முன்னதாக, "ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷியாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, நாங்கள் நிச்சயமாக அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம்" என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com