சூடான் நிலவரம்: ஐ.நா. பொதுச் செயலருடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

 ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்
சூடான் நிலவரம்: ஐ.நா. பொதுச் செயலருடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

 ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஜெய்சங்கா், மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னா் முதல் முறையாக லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கு 9 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

முன்னதாக, அமெரிக்காவின் நியூயாா்க் சென்ற அவா், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் கூறும்போது, ‘ஐ.நா. பொதுச் செயலரைச் சந்தித்தது முக்கிய நிகழ்வு. இந்தச் சந்திப்பின்போது சூடான் குறித்து விரிவாகப் பேசினோம். சூடானில் சண்டை நிறுத்தத்தைக் கொண்டுவருவதில், ஐ.நா. முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் தலைமையில் ஜி20, உக்ரைன் போா் குறித்து பேச்சுவாா்த்தைகள் நடந்தன’ என்றாா்.

சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் கடந்த ஒரு வாரமாக இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்தியா் ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com