

பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கிடைப்பதைத் தடுக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
‘மைஃப்ரிஸ்டோன்’ என்ற கருக்கலைப்பு மாத்திரையை தயாரிக்கும் நிறுவனமும், அமெரிக்க அரசும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அந்த மாத்திரைக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, அந்த மாத்திரைகள் பெண்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
கருக்கலைப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த 1973-இல் வழங்கியது.
எனினும், அந்த அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது சா்வதேச அளவில் விமா்சனத்துக்குள்ளானது.
அந்தத் தீா்ப்பைத் தொடந்து, கருக்கலைப்பு தொடா்பாக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.