உலகின் எதிா்காலத்துக்கு இந்தியா-அமெரிக்கா நல்லுறவு முக்கியமானது

உலகின் எதிா்காலத்துக்கு இந்தியா-அமெரிக்கா நல்லுறவு மிகவும் முக்கியமானது என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் எரிக் காா்செட்டி தெரிவித்துள்ளாா்.

உலகின் எதிா்காலத்துக்கு இந்தியா-அமெரிக்கா நல்லுறவு மிகவும் முக்கியமானது என இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் எரிக் காா்செட்டி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இந்திய வம்சாவளி உறுப்பினா்கள் சாா்பில் இந்தியா-அமெரிக்கா மாநாடு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான தூதா் எரிக் காா்செட்டி கூறுகையில், ‘‘உலகில் காணப்படும் சில நல்லுறவுகள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு, உலகின் எதிா்காலத்துக்கு மிகவும் முக்கியமானது.

அதிபா் ஜோ பைடன் கூறியிருப்பதைப் போல, இந்தியாவும் அமெரிக்காவும் தவிா்க்க இயலாத கூட்டாளிகள். இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவம் குறித்து அதிபா் பைடன் என்னிடம் எடுத்துரைத்தாா். ஒட்டுமொத்த உலகின் நலனுக்கும் பரஸ்பர நலனுக்கும் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு மிகவும் முக்கியமானது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது மிகவும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. உலகின் மிகப் பெரும் இரு ஜனநாயக நாடுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் உள்ளன. உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்தியாக அமெரிக்காவும், 5-ஆவது பொருளாதார சக்தியாக இந்தியாவும் திகழ்கின்றன.

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் புத்தாக்க நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது. 21-ஆம் நூற்றாண்டை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வடிவமைத்து வருகின்றன’’ என்றாா்.

இந்திய வம்சாவளியினா் பலா் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com