
நார்வேயில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தொடர் கனமழையால் நாட்டின் பல இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மக்கள் அவர்களது இருப்பிடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் மேடான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தொடர் விடுமுறை: ரூ.3,000 விமான டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனை
பாலங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கனமழை தொடர்வதால் ஆறுகள் நிரம்பி அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை கனமழைக்கு எந்த ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. நார்வேயில் உள்ள அணைகளின் நிலையை அந்நாட்டு அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நார்வே மக்கள் அடுத்த சில நாள்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.