மியான்மரில் வெள்ளம்: 45 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைப்பு!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
மியான்மரில் வெள்ளம்: 45 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைப்பு!

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்த வெளியிட்ட தகவலில், 

மோன் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். 

பருவமழையால் கச்சின், கயின், பாகோ, மாக்வே, மோன் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதும் 109 தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மோன், கயின் மற்றும் ரக்கைன் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளப்பெருக்கால் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ராக்கைனில் 2,146 வீடுகளில் வசிக்கும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களக்கு மாற்றியுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கயினில், ஏழு நகரங்களில் ஆறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக கயின் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது, இதன் விளைவாக திங்களன்று மியாவாடி-கவ்காரிக் ஆசிய சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சிட்டாங், பாகோ மற்றும் தன்ல்வின் ஆறுகள் உள்பட பல ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com