சந்திரயான்-3 வெற்றி: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாழ்த்து

நிலவின் துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்,
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: நிலவின் துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார், மேலும் இது "சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கும் நம்பமுடியாத சாதனை" என்று தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா, ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விக்ரம் சாராபாய் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் நிலவை ஆராய்ச்சி செய்து இந்தியா மேற்கொண்டுள்ள 2-ஆவது முயற்சி இது. புவி சுற்றுப்பாதையில் இருந்து விலகி, கடந்த ஆக. 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்ட சந்தியான்-3 விண்கலம், 18 நாட்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி லண்டன் சாதனம் விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு, விண்கலனுக்கும் நிலவின் தரைப்பகுதிக்கும் இடையே தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

அதன், ‘17 நிமிட சோதனை நேரம்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் வாணிக்கப்பட்ட லூனா லேண்டட் சாதனத்தின் மென் தரையிறக்கும், மிகவும் சவாலான இந்தப் பணிகளுக்கான பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக முடித்தனர். இதன்மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

‘‘நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோவுக்கு பாராட்டுகள். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கி வெற்றிகண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை எட்டியுள்ள இந்தியாவுக்கு பாராட்டுகள். இத்திட்டத்தில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த செயலாற்றுவதில், நாசா மகிழ்ச்சியடைகிறது’ என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பாராட்டு தெரிவித்தது.

இந்த நிலையில், நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறங்கியதற்கு இந்தியாவுக்கு வாழ்த்துகள். சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். இந்த பணி மற்றும் விண்வெளி ஆய்வுகளில் உங்களுடன் கூட்டாளிகளாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், ”என்று ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com