ஹவாய் காட்டுத் தீ: கணக்கில் வராத 400 பேர்!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் மேலும் பட்டியலில் வராத 400 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.  
fire102633
fire102633
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்திலுள்ள மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் மேலும் பட்டியலில் வராத 400 பேரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை.  

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

மாவி தீவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள லஹேனா, புலேஹு மற்றும் மத்தியப் பகுதிகளில் காணாமல் போனவர்களின் பேர் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8-ல் மாவி தீவில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 115 பேர் பலியாகியுள்ளனர். பேரழிவு தரும் காட்டுத் தீயில் முன்னதாக 388 பேரின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில், மேலும் 400 பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒற்றை அடுக்குமாடிகளில் 100 சதவீதம் தேடுதல் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

மேலும், 1,700-களில் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமான லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.காட்டுத் தீயில் 271 கட்டுமானங்கள், 19,000 வீடுகள், கடைகள், பிற கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். 

லஹேனா நகரில் இந்தியாவிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்னா் கொண்டு வந்து நடப்பட்ட பழைமை வாய்ந்த ஆலமரமும் தீயில் கருகியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com