
இன்ஸ்டாகிராமின் திரெட்ஸ் செயலியில் தேடலில் அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டருக்குப் போட்டியாக 'திரெட்ஸ்' என்ற செயலியைக் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது.
அறிமுகமான சில நாள்களில் பயனர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு அதிகரித்தாலும் ஒரு சில வாரங்களில் திரெட்ஸ் அதன் பயன்பாட்டில் பின்னடைவைச் சந்தித்தது.
இதையடுத்து திரெட்ஸ் தனது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திரெட்ஸ் செயலியில் தேடலில்(search) அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம்.
திரெட்ஸில் 'கீவேர்டு தேடல்' அனைத்து மொழிகளையும் ஆதரிக்கும் என்றும் இது உங்களுக்கு விருப்பமான உரையாடல்களைக் கண்டறிவதற்கு வழிவகுக்கும் என்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் உங்களிடம் இதுகுறித்த கருத்துகள் இருந்தால் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஆங்கிலம் பேசும் நாடுகளில் இது சோதிக்கப்பட்டது.
இந்த புதிய வசதி தற்போது 10 கோடி பயனர்கள் உள்ள திரெட்ஸின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் என்று அமெரிக்க தொழில்நுட்ப செய்தி நிறுவனமான டெக்கிரஞ்ச் தெரிவிக்கின்றது.
மேலும் இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் செயலிகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளதாக கூறிய நிறுவனம், தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்காமல் திரெட்ஸ் செயலியை நீக்கலாம் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்தில் திரெட்ஸ் செயலி அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.