
டெக்சாஸ் நகரங்களான ஆஸ்டின், சான் அன்டோனியோவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர்.
சான் அன்டோனியோவில் ராயல் சாலையில் அருகே உள்ள குடியிருப்பில் 50 வயதுடைய ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடந்தனர். செவ்வாயன்று ஆஸ்டினில் நடந்த தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 காவலர் உள்பட நான்கு பேர் பலியாகினர். மேலும் மூவர் காயமடைந்தனர்.
ஆஸ்டினில் நடந்த கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கும், சான் அன்டோனியோவில் நடந்த இரட்டைக் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.