
2024ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது? என்னவெல்லாம் நடக்கும்? என்பது குறித்து உலகை முன்கூட்டியே கணிக்கும் திறன் படைத்த பாபா வங்கா கணித்துக் கொடுத்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஒருவழியாக நிறைவுபெறவிருக்கும் நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடைய உருவாகிவிட்டது.
இதையும் படிக்க.. சென்னைக்கு ஓய்வு; தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அலர்ட்
உலகில் என்ன நடக்கும் என்று பாபா வங்கா கணித்துக் கொடுத்த கணிப்புகள் கிட்டத்தட்ட 85 சதவீதம் மிகத் துல்லியமாக நடந்திருக்கிறது. அவரது 9/11 தாக்குதல், உக்ரைன் போர் என பல விஷயங்கள் ஆணியடித்தது போல நடக்கும் போது உலகமே அவரை உற்றுகவனிக்கவும் தொடங்கிவிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், 2024ஆம் ஆண்டு நடக்கப் போகும் 7 நிகழ்வுகள் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது வெளியாகியிருக்கிறது.
முதல் கணிப்பே உலகையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தும் கணிப்பாக உள்ளது. அதாவது, ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை, அந்நாட்டு குடிமகன் ஒருவர் படுகொலை செய்வார் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கும். குறிப்பாக மிகப்பெரிய நாடுகளில் உயிரியியல் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
வழக்கம் போல, இயற்கைப் பேரிடர்கள்.. 2024ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்களால் வரலாற்றைப் புரட்டும் ஆண்டாக இருக்கும் என்றும், வானிலை தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு காரணங்களால், நாடுகளில் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்றும், ஏராளமான சைபர் மோசடிகள் அல்லது தாக்குதல்கள் நடத்தப்பட்டு, நாடுகளின் பாதுகாப்பு நிலைகுலையும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
புற்றுநோய் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதிக்கு 2024ஆம் ஆண்டு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்துச் சொல்லியிருக்கிறார்.
வங்கேலிய பண்டேவா குஷ்டெரொவா என்ற 81 வயதான கியூபா நாட்டைச் சேர்ந்த இவரை பாபா வங்கா என்றே இவரைப் பின் தொடர்வோர் அன்போடு அழைக்கிறார்கள்.
வருங்காலம் பற்றிய பல்வேறு கணிப்புகளை இவர் அவ்வப்போது வெளியிடுவார். அவர் கூறியது போலவே நடக்கும் போது அவரது கணிப்பை அறிந்து பலரும் ஆச்சரியமடைவதும் தொடர்கதை.
இரட்டைக் கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற்றம் என அவர் இதுவரை வெளியிட்ட கணிப்புகளில் சுமார் 90 சதவீதம் துல்லியமாக நடந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறார்கள் இவரைப் பின்தொடர்வோர்.
இவர் 12 வயது சிறுமியாக இருந்தபோது புயலில் சிக்கி, கண்பார்வையை இழந்தவர். இவர் கண் பார்வையை இழந்த பிறகு எதிர்காலத்தைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அவர் இந்த ஆண்டுக்கான கணிப்புகளை மட்டுமல்ல, 5079ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஆறு கணிப்பு வீதம் ஒவ்வொரு ஆண்டுக்கும் தெள்ளத்தெளிவாக கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அது என்ன 5079 ஆம் ஆண்டு வரை என்கிறீர்களா? அவரது கணிப்பின்படி 5079 ஆம் ஆண்டுதான் ஒட்டுமொத்த உலகமுமே அழிந்துவிடுமாம்.
இவர் வெளியிட்டிருக்கும் சில அதிசய கணிப்புகளில், 2028ஆம் ஆண்டு வீனஸ் கிரகத்துக்கு மக்கள் செல்வார்கள் என்றும், 2046ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும், 2100 ஆம் ஆண்டுக்குப் பிறகு செயற்கை சூரியஒளி உருவாக்கப்பட்டு இரவு என்பதே இருக்காது என்றும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.