கோப்புப்படம்.
கோப்புப்படம்.

இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதி: இந்தோனேசியா திட்டம்

இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க இந்தோனேசியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வரவை ஊக்குவித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இந்தோனேயாவிற்குள் நுழைய விசா அற்ற அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் சாண்டியாகோ ஊனோ தெரிவித்துள்ளார். 

சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் எனவும் அதிக நாள் தங்கும் நோக்கில் வருபவர்களே எங்களது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com