தீயணைப்புப் படை வீராங்கனைகளாக முதல்முறையாக பெண்கள்!

2,707 பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 15 பேர் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
தீயணைப்புப் படை வீராங்கனைகள்
தீயணைப்புப் படை வீராங்கனைகள்

வங்காளதேசத்தில் தீயணைப்பு படை வீரர்களாக முதல் முறையாக பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

2,707 பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 15 பேர் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

பாலின பாகுபாடிற்கு எதிரான முயற்சியாக தீயணைப்புப் படை வீராங்கனைகள் நியமிக்கப்படுவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. 

வங்கதேச தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இதற்கு முன்பு பெண்கள் பணிபுரிந்துள்ளனர். எனினும், தீயணைப்புப் படை வீராங்கனைகளாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இது தொடர்பாக பேசிய வங்கதேச உள் துறை அமைச்சர் அசாதுஸ்மன் கான் கமல், தலைநகர் தாகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 வீராங்கனைகள் தீயணைப்புப் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை, எழுத்துத் தேர்வு மூலம் 2,707 விண்ணப்பங்கள் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதல் கட்டமாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com