
வடக்கு சீனாவின் ஷாங்க்கிசி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நிலக்கரியை சேமித்துவைக்கப் பயன்படுத்தப்படும் பதுங்கு குழியை நான்கு பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் ஒருவரை மீட்டனர். ஆனால் மூவர் உயிரிழந்தனர்.
நிலக்கரி உற்பத்தி செய்யும் முக்கிய இடமான ஷாங்க்சியில் உள்ள ஹுவாஜின் கோக்கிங் நிலக்கரி நிறுவனத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்டில் ஷாங்க்சியில் நிலக்கரி சுரங்க வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். தெற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து மீட்புப் படையினருடன், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.