அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தகுதியற்றவர்: நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவி வகுத்த டிரம்ப், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்த டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்தார். தொடர்ந்து, வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கொண்டு தாக்கியதால், அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர்.

இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல், அமெரிக்க அதிபர் மாளிகையைவிட்டு காலி செய்த டிரம்ப், அரசின் முக்கிய ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்காமல், எடுத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கொலராடோ நீதிமன்றத்தில் வெள்ளை மாளிகை மீதான தேசத் துரோக தாக்குதல் செய்ய காரணமாக இருந்ததாக டிரம்ப் மீது  தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்புக்கு தகுதியில்லை என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க அரசுக்கு எதிராக ஆதரவாளர்களை திரட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டவர் பதவியில் இருக்க முடியாது என்ற அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்த விதி 3-ன்படி இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை டிரம்ப் எதிர்த்த நிலையில், அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ஆம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் இதுபோன்ற வழக்கை சந்தித்த முதல் அரசியல் தலைவர் டொனால்டு டிரம்ப் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com