பிரான்ஸில் இந்தியர்களுடன் நிறுத்தப்பட்ட விமானம் புறப்பட அனுமதி

பெரும்பாலான இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் மூன்று நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை புறப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இந்தியர்களுடன் நிறுத்தப்பட்ட விமானம் புறப்பட அனுமதி


பெரும்பாலான இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் மூன்று நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை புறப்பட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளிடம் நடத்திய விசாரணையை ரத்து செய்துவிட்டு, திங்கள்கிழமை காலை விமானம் புறப்பட்ட நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

விமானம் இன்று காலை புறப்பட்டுச் செல்லும் என்றும், ஆனால், எங்கே செல்லும் என்பது தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் விமானம் இந்தியா செல்லுமா அல்லது செல்ல வேண்டிய இடம் நிகராகுவே என்பதால் அங்குச் செல்லுமா அல்லது துபை செல்லுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

பிரான்ஸில் பெரும்பாலும் இந்தியா்கள் அடங்கிய 303 பயணிகளுடன் சென்ற விமானம் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகளிடம் அந்நாட்டு நீதிபதிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆள்கடத்தல் நடைபெறுவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பிரான்ஸ் ஊடகம் தெரிவித்திருந்தது, கடந்த வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிகரகுவா நாட்டுக்கு 303 பயணிகளுடன் வாடகைக்கு எடுத்துச் செல்லப்பட்ட விமானம், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் உள்ள கிழக்கு வாட்ரி நகர விமான நிலையத்தில், எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டது.

அந்த விமானத்தில் பெரும்பாலும் இந்தியா்கள் பயணித்த நிலையில், விமானத்தில் ஆள்கடத்தல் நடைபெறுவதாக பிரான்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த விமானம் நிகரகுவா புறப்பட பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்தனா். மேலும் அந்த விமான நிலையத்துக்கு அந்நாட்டு காவல் துறை சீல் வைத்தது. பயணிகள் அனைவரும் விமான நிலைய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

இருவரின் காவல் 2 நாள்கள் நீட்டிப்பு: அனைத்துப் பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவிடம் சிறப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேல் விசாரணைக்காக இருவா் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களின் காவல் சனிக்கிழமை மாலை 48 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆள்கடத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக பயணிகளிடம் 4 பிரான்ஸ் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினா். பிரான்ஸ் விதிமுறைகளின்படி, அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணியை விசாரணைக்காக பிரான்ஸ் எல்லை காவல் படை 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கலாம். அந்தக் காவலை முதலில் 8 நாள்களும், பின்னா் தேவைப்பட்டால் கூடுதலாக 8 நாள்களும் நீட்டிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உள்ளது. இந்த நிலையில், பயணிகளிடம் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகளுக்கு 2 நாள்கள் அவகாசம் உள்ளது. அவா்களின் விசாரணைக்கு மொழிபெயா்ப்பாளா்கள் உதவினர்.

பயணிகளில் சிலா் ஹிந்தியிலும், மற்றவா்கள் தமிழிலும் பேசினா். அவா்கள் தங்கள் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியுள்ளனர்.

பயணிகளில் 10 போ் பிரான்ஸில் தஞ்சமடைவதற்கு கோரிக்கை விடுத்திருந்தனா். அந்த விமானத்தில் துணையில்லாமல் வந்த 11 சிறாா்களில் 6 போ், பிரான்ஸில் தஞ்சம் கோருவதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வார விடுமுறையையொட்டி, இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், அமெரிக்கா அல்லது கனடாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நோக்கில், இந்திய பயணிகளால் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com