முதல்முறை கிறிஸ்துமஸ் கொண்டாடிய உக்ரைன் மக்கள்!

உக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உக்ரைன் மக்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உக்ரைன் மக்கள்

உக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

உக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிவந்த நிலையில், தற்போது டிசம்பர் 25ஆம் தேதி முதல்முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஜூலியன் நாள்காட்டி மற்றும் ரஷிய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷியாவில் ஜனவரி மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரஷிய கண்டத்திலுள்ள உக்ரைனும் ரஷியாவின் பாரம்பரிய விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்தது. 

இந்நிலையில்,  உக்ரைன் - ரஷியா இடையிலான போரின் எதிரொலியாக உக்ரைனுக்கு புதிய விதிமுறைகளை அந்நாட்டு அதிபர் வெலாதிமீர் ஸெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து ரஷிய பாரம்பரிய முறையைத் தவிர்த்து மேற்கத்திய அல்லது கிரிகோரியன் நாள்காட்டியின் படி டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை உக்ரைன் மக்கள் கொண்டாடினர். 

இது தொடர்பான அறிவிப்பை அதிபர்  ஸெலென்ஸ்கி நேற்று (டிச. 24) அறிவித்திருந்தார். அதில் நாட்டு மக்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்ததாவது ''அனைத்து உக்ரைன் மக்களும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒரே நாளில், ஒரு பெரிய குடும்பமாக, ஒரே நாடாக நாம் ஒன்றிணைய வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com