
வாஷிங்டன்: ஈரான் ஆதரவுடன் இராக்கில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவினா் மீது தாக்குதல் நடத்த தங்கள் நாட்டுப் படையினருக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
வடக்கு இராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரா்கள் காயமடைந்தனா்.
அதற்குப் பதிலடியாக, இராக்கில் செயல்படும் அனைத்து ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களுக்கும் எதிராக தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராணுவத்துக்கு அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக். 7-இல் சண்டை தொடங்கியதிலிருந்தே இராக்கிலுள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவுப் படையினா் சிறியவகை ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.