ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகும் ஐ-போன் வடிவமைப்பாளர்!

ஆப்பிள் நிறுவத்தின் ஐ-போன் மற்றும் கடிகார வகைகளை வடிவமைத்த டேங்க் டேன், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனங்களின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கவுள்ளார். 
ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகும் ஐ-போன் வடிவமைப்பாளர்!


ஆப்பிள் நிறுவத்தின் ஐ-போன் மற்றும் கடிகார வகைகளை வடிவமைத்த டேங்க் டேன், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனங்களின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கவுள்ளார். 

இதற்காக ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகி, இங்கிலாந்தைச் சேர்ந்த  லவ்ஃப்ரம் நிறுவனத்தில் இணையவுள்ளார். இதற்காக வரும் பிப்ரவரி மாதம் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து டேங்க் டேன் விலகுகிறார். 

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மற்றும் ஆப்பிள் நிறுவன கைக்கடிகாரங்களை வடிவமைத்தவர் டேங்க் டேன். 

சீனாவைச் சேர்ந்த இவர், பிப்ரவரி மாதத்துடன் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளார். அதன் பிறகு, இங்கிலாந்தைச் சேர்ந்த லவ்ஃப்ரம் நிறுவனத்தில் இணைகிறார். தொழில்நுட்பப்  பொருள்களுக்கான வடிவமைப்புகளை ஆராய்ந்து வழங்குவதே இந்நிறுவனத்தின் சேவை. 

இந்நிறுவனத்தை உருவாக்கியவர் பிரபல தொழில்முறை வடிவமைப்பாளரான ஜோனாதன் ஐவ் என்பவராவார். இவரும் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஐ-போன் வடிவமைப்பாளரான டேங்க் டேன் உடன் இணைந்து செய்யறிவு தொழில்நுட்பப் பொருள்களுக்கான வடிவமைப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com