உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்கள்!

உலக அளவில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக யூடியூப் இடம் பெற்றுள்ளது. 
உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்கள்!
Published on
Updated on
1 min read

உலக அளவில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக யூடியூப் இடம் பெற்றுள்ளது. 

இணையதள நிறுவனங்களில் தரவுகளின் அடிப்படையில் அதிகம் பார்வையிடப்பட்ட தளங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பயனர்கள் குறிப்பிட்ட இணையதளங்களில் சென்று பார்வையிடும்போதோ அல்லது தங்களுக்குத் தேவையானவற்றை தேடும்போதோ அவர் அந்த இணையதளத்தை பயன்படுத்துவதாக தரவுகள் கொள்ளப்படும். அந்த தரவுகளின் அடிப்படையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இணையதளங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

அந்த பட்டியலில் கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த இணையதம் 8500 கோடி (85.1 பில்லியன்) முறை பார்க்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 35 கோடி முறை கூகுள் நிறுவனம் பார்க்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன.

அதற்கு அடுத்தபடியாக யூடியூப் நிறுவனம் இடம்பிடித்துள்ளது. 3300 கோடி முறை (33 பில்லியன்) அதனை பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று அதிக அளவில் நீடித்து பார்வையிடப்பட்ட இணையதளங்களில் யூடியூப் 2ஆம் இடத்தில் உள்ளது. சீனாவைச் சேர்ந்த பிலிபிலி இணையதளம் அதிக நீடித்த பார்வையாளர்களைக் கொண்ட இணையதளங்களில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக முகநூல் 1780 கோடி (17.8 பில்லியன்) முறையும், சுட்டுரை நிறுவனம் 680 கோடி (6.8 பில்லியன்) முறையும் பார்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பயனர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம் 290 கோடி முறை பார்வையிடப்பட்டு (2.9 பில்லியன்) 10வது இடத்தில் உள்ளது. 


அதிகம் பார்வையிடப்பட்ட இணையதளங்கள்: வரிசைப்படி

1. கூகுள்
2. யூடியூப்
3. முகநூல் 
4. டிவிட்டர்
5. இன்ஸ்டாகிராம் 
6. பைடு (Baidu)
7. விக்கிப்பீடியா
8. யாண்டெக்ஸ் (Yandex)
9. யாஹூ
10. வாட்ஸ்ஆப்
11. எக்ஸ் விடியோஸ்
12. அமேசான்
13. பார்ன் ஹப்
14. எக்ஸ்.என்.எக்ஸ்.எக்ஸ்.
15. லைவ்.காம்

தரவு நிறுவனங்கள், செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள், கேம்ஸ், விடியோக்கள், மென்பொருள் மேம்பாடு என பல்வேறு வகைகளில் இயங்கும் இணையதளங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com