கிரேக்கத் தீவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து: 4 பேர் பலி!

கிரேக்கத் தீவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து: 4 பேர் பலி!

ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவான லெரோஸ் பகுதியில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றாக படகு கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரு பெண் உயிரிழந்தனர். 

ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவான லெரோஸ் பகுதியில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றாக படகு கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரு பெண் உயிரிழந்தனர். 

பெண்ணின் உடல் கடலில் சேகரிக்கப்பட்டதாக ஹெலனிக் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மூன்று குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்தனர். 

சமீபத்திய கணக்கின்படி மொத்தம் 39 பேர் மீட்கப்பட்டனர். மேலும் பலர் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துருக்கி கடற்கரையில் இருந்து புறப்பட்ட டிங்கி படகில் சுமார் 40 பேர் இருந்ததாகவும், அதில் சிறார்கள், மாற்றுத்திறனாளிகள் இருந்ததாகவும், படகிலிருந்து தப்பியவர்கள் ஹெலனிக் கடலோர காவல்படை அறிக்கை தெரிவித்துள்ளது. 

படிக்க:துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 100க்கும் மேற்பட்டோர் பலி
 
கனமழை, பலத்த காற்று மற்றும் குறைந்த தெரிவுநிலையுடன், மோசமான வானிலைக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 

கடந்த 2015 முதல் ஏஜியன் கடலில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com