இடிபாடுகளுக்கு அடியில் இருக்கும் சகோதரனைப் பாதுகாத்த 7 வயது சிறுமி!

இடிபாடுகளுக்கு அடியில் இருக்கும் சகோதரனைப் பாதுகாத்த 7 வயது சிறுமி!

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 
Published on

இடிபாடுகளுக்கு அடியில் இருக்கும் சகோதரனைப் பாதுகாகும் 7 வயது சிறுமியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிடங்களில் குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.

திங்கள்கிழமை இரவு வரை இரு நாடுகளிலும் சோ்த்து 2,600 போ் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கி சிரியாவில் இடிபாடுகளுக்கு அடியில் இருக்கும் சகோதரனைப் பாதுகாக்கும் 7 வயது சிறுமியின் புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

30 மணி நேரமாக தனது சகோதரை அணைத்து கொண்டு இருக்கும் அந்த சிறுமியின் புகைப்படம் நெஞ்சை பதற வைக்கிறது. பின்னர், இருவரையும் மீட்பு குழுவினர் மீட்கப்படுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com