அடுத்து இந்தியாவில் நிலநடுக்கமா? டச்சு விஞ்ஞானியின் கணிப்பு!

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை வருவதற்கு 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வரும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்து இந்தியாவில் நிலநடுக்கமா? டச்சு விஞ்ஞானியின் கணிப்பு!
Published on
Updated on
1 min read

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை வருவதற்கு 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து சிகிச்சைக்காக தவித்து வரும் நிலையில், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

துருக்கி மற்றும் சிரியாவில் அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த உலகைய துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் இந்த துருக்கி - சிரியா நிலநடுக்கம் தொடர்பாக ஒரே ஒருவர் முன்கூட்டியே கணித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த கொடுந்துயரம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக, ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் என்ற டச்சு விஞ்ஞானி, பிப்ரவரி 3ஆம் தேதி தென்-மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் தற்போதோ அல்லது சில நாள்களிலோ நிலநடுக்கம் நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது சுட்டுரைப் பக்கத்தில் அவரைப் பற்றிய தகவலில், நெதர்லாந்தில் உள்ள சூரிய முறையின் வடிவியல் ஆய்வு மையத்தில் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துருக்கி, சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்தியப் பெருங்கடலில் முடியும் என டச்சு ஆய்வாளர் ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் மாநில அமைச்சர் இப்ராஹிம்,  ஃபிராங்க் ஹோகர்பீட்ஸ் பேசிய விடியோவை தன்னுடைய சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவில், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஹோகர்பீட்ஸ் எச்சரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com