பதவி விலகும் ஸ்காட்லாந்து பிரதமர்

ஸ்காட்லாந்து பிரதமர் பொறுப்பிலிருந்து நிக்கோலா ஸ்டர்ஜன் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
பதவி விலகும் ஸ்காட்லாந்து பிரதமர்

ஸ்காட்லாந்து பிரதமர் பொறுப்பிலிருந்து நிக்கோலா ஸ்டர்ஜன் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஸ்காட்லாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் நிக்கோலா ஸ்டர்ஜன். ஸ்காட்லாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் 8 ஆண்டுகளாக வகித்துவந்த பிரதமர் பதவியிலிருந்து நிக்கோலா ஸ்டர்ஜன் விலக உள்ளதாக பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் தேர்வு தொடர்பாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பாலின சீர்திருத்தம் தொடர்பான சமீபத்திய சட்டங்கள் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com