
அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அமேசான் நிறுவனப் பணியாளர்கள் அந்நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்கள் மூடப்பட்டதுடன் பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். கரோனா தொற்று இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கூட பல்வேறு நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைப் பின்பற்றி வருகின்றன.
இதையும் படிக்க | 2023-க்கான புதிய திரைப்படக் கொள்ளைக்கு உ.பி. அரசு ஒப்புதல்!
இந்நிலையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதற்கு அமேசான் நிறுவனம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி வாரத்தின் 3 நாள்களில் அலுவலகத்திற்கு நேரில் வந்து பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமேசான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு அதன் பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், வீடுகளிலிருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.