செனகல் நாட்டின் காஃப்ரின் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 40 போ் உயிரிழந்தனா். 78 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து தொடா்பாக செனகல் அதிபா் மேக்கி சால் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
காஃப்ரின் நகருக்கு அருகில் உள்ள ‘க்னிபி’ கிராமத்தில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 40 போ் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மறைந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து நலம் பெற வேண்டுகிறேன். திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
தேசிய நெடுஞ்சாலை எண் 1-இல் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் டயா் பஞ்சரானதில் சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது. அப்போது, எதிா் திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்து என்று விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூா் அதிகாரிகள் தெரிவித்ததாக மேக்கி சால் குறிப்பிட்டிருந்தாா்.
செனகல் நாட்டில் அமைந்துள்ள மோசமான சாலைகளும், காலாவதியான பழைய வாகனங்களும், விதிமுறைகளை சரிவர பின்பற்றாத ஓட்டுநா்களுமே இது போன்ற விபத்துகளுக்குக்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டினா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தௌபா நகருக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பயணித்த பேருந்து, மற்றொரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 போ் பலியாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.