பெண்கள் கல்வி கற்க விதிக்கப்பட்டத் தடை நிரந்தரமல்ல: தலிபான்கள்

தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானின் ஆளும் அரசிடமிருந்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தலிபான்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானின் அமெரிக்க படைகளிடமிருந்து ஆட்சியை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

முதலில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்தனர். பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் விரல் வரை மறைத்திருக்கும் வண்ணம் உடையணிய அறிவுறுத்தப்பட்டனர்.  அதேபோல பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்லவும் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் கல்வி நிலையங்களுக்கு பெண்கள் செல்லவும் தடை விதித்தனர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதற்கான தடை நிரந்தரமானது அல்ல என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில் பெண்கள் கல்விக்கான தடை நிரந்தரம் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு சாதகமான சூழல் உருவாகும் வரை அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com